வாடாத பக்கங்கள் -7

8
வாடாத பக்கங்கள் இரண்டு வாரம் கழித்து மீண்டும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள் இங்கே.

நண்பர்கள் பொறுத்தருளவும், ஒத்துழைக்கவும் வேண்டுகிறோம்.


பதிவு குறிப்பு பரிந்துரைத்தவர்
ஓடும் ரயிலில் நகராத கப்பல்
(சரவணன்)
குழந்தைகளின்  அற்புத உலகினிற்குள் எளிதாய் புகுந்து இலக்கியம் படைக்கும் சரவணனின் படைப்புகளில்
மற்றுமொரு சிறந்த  பதிவிது.
அந்நியமாகும் ஆசைகள்
(ராமசாமி)
பள்ளி பாடத்தில் படித்த அண்ணாவின் "செவ்வாழை" சிறுகதை   ஒரு ஏழை சிறுவனின் ஏமாற்றத்தையும்,தொடர்ந்து ஒடுக்கபடும் விளிம்பு நிலையின் அவல நிலை குறித்தும் மட்டுமே உணர்த்தியது.
ராமசாமி அய்யாவின் இப்பதிவு அக்கதையை கொண்டு அந்நியமாக்கல் கோட்பாடு உட்பட பல உள்ளார்ந்த விஷயங்களை தெளிவுபடுத்துகின்றது.
,,
வீழும் நினைவுகள்
(தோழி)
சொல்லப்படாத,பேசப்படாத தருணங்களை,உணர்ந்தும் உணராத முகங்களை,தவிக்கும் உணர்வுகளை மிக அழகாக பதிகிறது கவிதை.
செல்லக்கண்ணம்மா என கொஞ்ச தோணும் வரிகள். ஒரு வார்த்தையை  முன்னவோ, பின்னவோ நகர்த்த முடியாத கச்சிதம்.
ஸ்டெல்லா புரூஸ் கவிதைகள்
(சந்தனமுல்லை)
முல்லையின் இந்த கட்டுரை ரொம்ப பிடிச்சிருந்தது. ஸ்டெல்லா ப்ரூசின் கவிதை பகிரலில், பகிர்ந்த கவிதைகளைவிட இவரின் எழுத்தும் அது கொண்டு சேர்க்கும் இடங்களும் அனுபவப் பூர்வமானவை. நான் பெற்றேன் இன்பம்.
,,
எங்களது முதல் படம்
(மாதவராஜ்)
பள்ளம் படம் பார்த்தேன்.
மாதவராஜ்,காமராஜ்,கார்த்தி போன்ற நண்பர்கள் எடுத்திருப்பார்கள் போல.என் அலுவல்கள் இடையே பார்த்து மிக சோர்ந்த பதிவு இது. இப்பவரையில் என்னால் இயங்க இயலவில்லை. நீங்க பார்க்கணும் மக்கா!
,,
வலியது உயிர்நிலை
(ராகவன்)
தத்தெடுத்தலின் தடுமாற்றங்களை, அதன் வலியும் வேதனையும் வெளிப்படும் பதிவு இது.
உலகம் உய்ய...தண்ணீர் தினத்துக்காக
(ராமலஷ்மி)
இராமலஷ்மி மேடம் அவர்களின் என்ற பதிவு படித்தேன். சின்ன சின்ன விஷயங்கள் என்றாலும் நாம் செய்ய வேண்டியவற்றை சரியாக தண்ணீர் தினம் வருவதை ஒட்டி விழிப்புணர்வு உண்டாக்க கூறியுள்ளது வரவேற்கத்தக்கது”.  சமீபத்தில் பாண்டிச்சேரி சென்றிருந்த பொழுது அங்கு ஒரு சின்ன விழிப்புணர்வு விளம்பரம் காண நேர்ந்தது. மனம் நெகிழ்ந்துவிட்டது. குழாயில் தண்ணீர் சொட்டு சொட்டாக விழுந்து வாளி நிரம்பி வழிந்து கொண்டிருக்கும். ஒரு சின்ன குழந்தை வேகமாக ஓடி வந்து குழாயை இறுக மூடுவாள். “உங்களுக்கான தேவை நிறைந்துவிட்டது... எங்களுக்கு?” என்ற கேள்வியுடன் முடிந்த விளம்பரம் மனதை மிகவும் வருத்தியது. எந்த விஷயத்தில் நாம் அடுத்த தலைமுறைக்கு நல்லதை விட்டு செல்கிறோம் என்ற யோசனை தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த பதிவுகள் மீண்டும் இந்த கேள்வியை நம்முன் வைக்கின்றன.
தனிமை எனக்கொரு போதிமரம்
(பாலமுருகன்)
தனிமை பற்றிய இவரது பதிவு நமது உணர்வுகளை தட்டி எழுப்புவதைப்போலவே உள்ளது. நாமும் அந்தத் தனிமையினூடே சென்று வந்ததைப்போல் இருந்தது. நல்ல பதிவு. இதனையும் நான் 'வாடாத பக்ககங்களுக்காக' பரிந்துரைக்கிறேன். நான் இந்த இடுகையை இப்போதுதான் முதல் முறையாக படிக்கிறேன். இதை எழுதுபவரது விபரம் எனக்குத் தெரியாது. ஜெயந்தி
நெருப்பில்லாமல் புகைகிறது
(சித்ரன்)
சிகரெட் புகைப்பதைப் பற்றி நேர்மையான ஒரு கட்டுரை. எல்லாப் பரிமாணத்தையும் அலசி இருக்கிறது. வடகரை
வேலன்
கர்ணமோட்சம்
(பிரசன்னா இராசன்)
அருமை...அருமை..என் வாழ்வின் மகத்தான சில விநாடிகள். வேறென்ன சொல்வது? கர்ண மோட்சம் எ‌ன்ற இந்த குறும்படத்தை சமீபத்தில் கேள்விப்பட்டு இங்கு வந்தேன். அப்படியே அந்த வலைப்பூவில் நின்று விட்டேன்.அ‌ங்கிருந்து மீண்டு வர இயலவில்லை. அறிமுகப்படுத்திய பிரசன்னா இராசனுக்கு நன்றி. முரளிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விநாயகம் முருகன்
தோழர் (ஆடுமாடு) சட்டென இவரது எழுத்துக்கள் வாசகனின் கரம்கோர்த்து பயணிக்கிறது. லட்சியங்களுக்கும், லௌகீக வாழ்வுக்கும் இடையில் செல்லும் கதை பெரும் அவஸ்தைக்குள்ளாக்குகிறது. இழப்பின் வேதனை நிறைகிறது.
தண்டவாளம் விட்டு இறங்காத ரயிலும், செவத்திக் கிழவியின் கனவும்  
(காமராஜ்)
கரிசல் மண் மணக்கும் ஆர்ப்பாட்டமில்லாத எழுத்தில் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை அறியமுடியும்.  புழுதி படிந்த மனிதர்களின் வாழ்வையும், அவர்கள் வலியையும் இங்கே தரிசிக்கலாம். ஸ்பரிசிக்கலாம்.
,,
என் காதலி மற்றும் நான்
(முரளிகுமார் பத்மநாபன்)
My Girl & I என்னும் கொரியப் படத்தினைப் பற்றிய விவரிப்பு. கவிதையாய் மனதில் தேங்குகிறது. கடலலையின் இரைச்சலோடு முதற்காதலின் நினைவுகள் ததும்புகின்றன.
,,
அனுரனன் வங்காளப்படம்
(லேகா)
நுட்பமான உணர்வுகளையும், உறவுகளையும் சித்தரிக்கும் இந்த வங்காளத் திரைப்படத்தினை மெல்லிய, அமைதியான குரலில் சொல்கிறார் லேகா.  கஞ்சன் ஜங்கா மலையைப் பற்றிய விவரிப்புகள், இந்தப் படத்தைப் பார்க்காமல் விட்டு விட்டோமே என நம்மை விரட்டும்.
,,
கனவு (அமுதா) எளிய வார்த்தைகளில் தொலையும் நம் வாழ்வைச் சொல்லும் கவிதை. குழந்தைகளின் உலகம் வசீகரமாய், கனவாய் விரிகிறது.
,,
இன்னொரு மழை
(சேரல்)
குழந்தை போன்ற சிறிய, அழகான கவிதை. மழை எதற்காக பெய்கிறது என்று எவ்வளவு கொஞ்சியபடி சொல்கிறார். நனைந்துகொண்டே இருக்கலாம் கவிதையின் அர்த்தங்களில்!
,,
ஒன்றுசேர்ந்த
(க.பாலாசி)
வட்டார மொழியில், பழமொழிகள் சினிமாப்பாடல்கல் எல்லாம் சேர்த்து கூட்டாஞ்சோறு போல பொங்கியிருக்கிறார். ரசித்து, ரசித்துப்  படிக்கலாம். பதிவு தரும்  
அர்த்தங்களோடு முரண்பாடுகள் இருப்பினும்…
,,
துறவிக்காமம் 
(விநாயகம் முருகன்)
இந்த விநாயக முருகனை என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன். நித்யானந்தா பற்றி பல பதிவுகள் வந்திருக்க, இந்தக் கவிஞன் சடேலேன மனதின் அழுக்குகளை தெருவில் போட்டு உடைக்கிறார். எள்ளலும், நையாண்டியும் தொனித்தாலும் சுயவிமர்சனமிக்க கவிதை.  ‘யாரடா மனிதன் இங்கே’ என விநாயக முருகன் கேட்கிறார். சொல்லுங்கள் மக்களே!
,,
சரிகை வண்ணத்துப்பூச்சி
(வேல்கண்ணன்)
கவிதானுபவம் என்னவென்றால், இந்தக் கவிதைதான். கவிஞன் இங்கே வண்ணத்துப் பூச்சியாகிப் போகிறான்.  அருமை.
,,
யஹி ஹே ரைட் சாய்ஸ் பேபி
(சந்தன முல்லை)
வலைப்பக்கங்களில் முக்கியமான பதிவர் சந்தனமுல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்துகிற பதிவு இது.  குழந்தை உலகம், நுட்பமான உணர்வுகள் மிக்க அனுபவங்கள் என பகிர்ந்த இவர், உலகின் முக்கியப் பிரச்சினை குறித்து ஆழமாகவும், வாழ்வின் காட்சிகளோடு சரளமாகவும் விவரிக்கிறார். இரண்டு மூன்று முறை படித்தேன்.
,,
வாழ்தலறம்
(ராகவன்)
இதுவும் முக்கியமான கவிதானுபவம். காற்றின் தீராத பக்கங்களில் எழுதிச் சென்ற பிரமிளின் இறகை எடுத்து வைத்துக்கொண்டு தனது பக்கம் ஒன்றில் எழுதி இருக்கிறார்.
,,
தலைப்புணைக் கொளினே (முனைவர்.
குணசீலன்)
தமிழின் அற்புதங்களை எடுத்துக் காட்டிக்கொண்டே இருக்கும் முக்கியப் பதிவர் குணசீலன். பழந்தமிழ் இலக்கியத்தின் சுவையை திகட்டாமல் சொல்லிக்கொண்டே இருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் கவிதையின் கூறுகளைக் கொண்ட சங்க இலக்கியத்தின் குறுந்தொகைப் பாடலை இங்கே  விவரிக்கிறார்.
,,
நுகத்தடி மாடுகள் (ரிஷபன்) படித்து முடித்தபோது கண்கலங்கிப் போயிருந்தேன். பணம் மனிதர்களோடு எப்படியெல்லாம் விளையாடுகிறது, அலைக்கழிக்கிறது, சுயத்தை இழக்க வைக்கிறது என்பதை சொல்லாமல் சொல்லும் அருமையான கதை.  ரிஷபனை “ஏ மனுஷா!” எனக் கூவி அழைக்கணும் போலிருந்தது.
,,
கலைந்து கொண்டே இருக்கும் வீடுகள் (அன்புடன் அருணா) தோற்றங்களும், காட்சிகளும் மாறி மாறி அடுக்கப்பட்டுச் செல்லும் கால ஓட்டத்தில், வீடுகள் எப்படியெல்லாம் கலைந்து போகின்றன என்பதைச் சொல்கிறது.  நினைவுகள் கலையாமல் இருக்கின்றன இப்படி கவிதைகளாக.
,,

Post a Comment

8 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top