’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் நல்ல நோக்கத்துடன்தான் இந்த வாடாத பக்கங்களைத் துவங்கினோம்.
ஆதரவு தெரிவித்து வந்த நண்பர்கள் கண்டு உற்சாகமாயிருந்தது.
ஆனால், நண்பர்கள் தாங்கள் படித்து, ரசித்த பதிவுகளைக் குறிப்பிடுவது மிகக் குறைவாகவே இருக்கிறது. ஒருசில நண்பர்களே தொடர்ந்து செய்து வருகின்றனர்.
நல்ல பதிவைப் படித்ததும், அதற்கு பின்னூட்டமோ, ஓட்டோ போடுவது போல, வாடாத பூக்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
இல்லையென்றால், எங்களைப் போன்ற மிகச் சிலரின் ரசனையையும், விருப்பத்தையும் பொறுத்தே அமையும்.
இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என யோசனைகளையும் தெரிவியுங்கள். இது உங்கள் பக்கங்கள்.
நாளை, வாடாத பக்கங்கள் - 7 பூக்கும்.