வாடாத பக்கங்கள் - 6

13

இந்த தடவை சில கேள்விகளோடு இந்த பக்கத்தை துவக்குவோம் எனத் தோன்றுகிறது.

 

1.சமீபத்தில் நார்வேயிலிருந்து வெளிவந்த தமிழ்நாவல் ‘பூவரசம் பூக்கள்’ எழுதியவர் யார்?
2. ‘பிறகொரு இரவு’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் யார்?
3.‘அக்கினிப்பிரவேசம்’ என்னும் தலைப்பில் தமிழில் சிறுகதை எழுதிய மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் யார் யார்?
4.1981ல் வெளிவந்த ‘புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை’ என்னும் நூலின் ஆசரியர் சமீபத்தில் காலமானார். அவர் பெயர் என்ன?
5.‘நான்காயிரம் கைகளும் ஒரே முகமும்’ நூலின் ஆசிரியர் யார்?
6.‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’ யாருடைய கட்டுரைத் தொகுதி?
7.‘வீடியோ மரியம்மன்’ சிறுகதைத் தொகுதியின் ஆசிரியர் யார்?
8.‘மஹ்மூத் தர்வீஷ்’ கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர் யார்?
9.சை.பீர் முகம்மதின் சிறுகதைத் தொகுப்பின் பெயர் என்ன?
10.‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ என்ற சொற்றொடர் சட்டென உங்கள் நினைவுக்கு எந்த நாவலைக் கொண்டு வருகிறது?

 

விடைகள் அடுத்த பதிவில்.

இனி, அவரவர்க்கு பிடித்த பக்கங்கள்....

 

 

பதிவு குறிப்பு பரிந்துரைத்தவர்
1. குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள் (நாவிஷ் செந்தில்குமார்)

மெல்லிய திடுக்கிடலோடு இப்படி அதிர்வுகளோடு ஆரம்பிக்கிறது இந்த கவிதை...  கவிதையின் முடிவில் சட்டென சோகம் வ‌ந்து அப்பிக்கொள்கிறது.படித்து பாருங்கள். உங்களுக்கு பிடிக்கலாம்.

வேளச்சேரி பாரதிநகரில்
கொலை நிகழ்வுகள்
அரங்கேறியிருக்கின்றன
கடந்த வாரத்தில்
நான் ஊரில் இல்லாத
சனி ஞாயிறு அன்று
தெரியாதவர்கள் உள்ளிட்ட
எனக்குப் பரிட்சயமான
நண்பர்களும்
சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள்

என்.விநாயக முருகன்
1. பெயர்கள் (ஜ்யோவ்ராம் சுந்தர்)

  பா.ராஜாராம்
1 தலைப்பு கவிதையிலேயே உள்ளது

2.மிஸ்டுகால் ரிங்டோன்
கோவை சூலூரைச் சேர்ந்த மதன் தற்பொழுது வசிப்பது பெங்களூரில். அவரது கவிதைகள் நிதர்சன்மானவைகளாகவும் மொழியை சிடுக்காக்கும் தொழில்னுட்பம் ஏதுமற்றனவாகவும் இருக்கும் வடகரைவேலன்

1. ஒரு பக்கம்: கடவுள்களின் கார்னிவெல் (ஸ்ரீதர் நாராயணன்)

அமெரிக்கக் கடவுள்களையும் கோவில்களையும் பற்றினதொரு பக்தி அதிகம் கலக்காத சுவாரசியமான கட்டுரை. :-)

சுரேஷ் கண்ணன்
1. பொழுதோட்டல் 
(பத்மா
)
கேள்விக‌ளை புதிராக‌ சில‌ந்தி பின்னும் வலை என்ற‌ ப‌டிம‌மாக‌ சொல்லி இருப்ப‌து அழ‌கு லாவண்யா
1. வலையப்பட்டி தவிலே (வித்யா)

நரேஷ் ஐயரை பற்றி எழுதிய மிக அழகான பதிவு.

Rajalakshmi Pakkirisamy
1.புத்தகம்  மூன்றாம் பார்வை 




நண்பர்கள் சேரல், ஞானசேகர், பீமொர்கன் ஆகியோர் தாங்கள் படிக்கும் புத்தகங்கள் குறித்துப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களுடைய முயற்சி பாராட்டுக்குரியது. தி ஜாவின் மோகமுள் குறித்த நண்பர் ஞானசேகரின் சமீபத்திய பதிவு அருமையாக இருந்தது. புத்தகம் பற்றிய தகவல்கள் வேண்டுவோர் கண்டிப்பாக இவர்களுடைய வலைப்பூவில் தேடித் பார்க்கலாம்.
கிருஷ்ணபிரபு
2.அழியாச் சுடர்கள்  (ராம்) நண்பர் ராமின் இந்த வலைப்பூ தீவிர தமிழ்ச் சிறுகதை வாசகர்களுக்கு அருமையான வேட்டை என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமான படைப்பாளிகளின் அறிய சிறுகதைகளைத் தேடித் தேடி தொகுக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவற்றை இணைய வாசகர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்கிறார். மூத்த படைப்பாளிகளின் பல கதைகளைப் படிக்க இவருடைய வலைப்பூவிற்குச் செல்லலாம். ,,
1.சிற்றிதழ்களின் முகவரி (நிலா ரசிகன்)  

 

தமிழில் வந்த பல சிற்றிதழ்களின் முகவரிகளைத் தொகுத்திருக்கிறார். நல்ல முயற்சி.  

மாதவராஜ்

2. பாட்டிகளும் அத்தைகளும் மற்றும் அந்நியப்பட்டுப் போன குழந்தைகளும் 

(கார்த்திகா வாசுதேவன்)

நினைவுகளின் பாதையில், திரும்ப மனமில்லாமல் செல்லும் அனுபவம். வண்ணதாசன், வண்ணநிலவன் ஆகியோரர் எழுத்தின் வசீகரம் இருக்கிறது.   ரசிக்கலாம் இதுபோல…. 

 

அங்கமர்ந்து தான் நான் பல ஆண்டுகள் பரீட்சைக்குப் படித்தேன் ,கதவில் சாய்ந்து அமர்ந்து கொண்டு முன்புற டெலிபோன் ஸ்டாண்ட் தாங்கி நுனியை காலால் இடறிக் கொண்டே எத்தனை மணி நேரங்கள் படித்தாலும் அலுக்கவே அலுக்காது. 

,,

3. நினைவுகள் நிறைகுகை (சுகிர்தா)

இப்படி இந்தப் பதிவைப் பற்றிச் சொல்கிறார் கவிஞர் யாத்ரா! 

 

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க சுகி, மனதை கவனித்தல், அதன் போக்கை துல்லியமாய் படம் பிடித்தது போன்று எழுதுதலை நிறைவாய் செய்திருக்கிறீர்கள். மனதின் அனுபவம் வார்த்தைகளில் மிகத் தெளிவாய் பதிவாகியிருக்கிறது

,,

4.துரியோதனன் துயில் (toto)

மகாபாரதத்தில் ஒரு முக்கியமான புள்ளியை மறுவாசிப்பு செய்கிறது.

,,

5.தெளிவு (விநாயக முருகன்)

இவரது கவிதைகள் எப்போதுமே ஒரு எள்ளலுடன் முடிவடைந்தாலும், முடிவடையாமல் நீள்கிறது நமக்குள் சிதறியபடி.

,,

6. இது முனிரத்தினத்தின் கதை (முத்துலெட்சுமியின் கதையும் தான்) – (சந்தனமுல்லை)

முதிர்கன்னியான ஒரு பெண் குறித்த வலி தரும் சித்திரம் இது. இயல்பான மொழியில் நம்மை  நெகிழ வைக்கிறது.

,,

7. முற்றுப் பெறாமலே 

(ரிஷபன்)

நல்ல கவிதை. வார்த்தைகளை செதுக்கினால் இன்னும் சிறப்பாக வந்திருக்கக் கூடியது எனவும் தோன்றுகிறது.

,,

8.கவிதை புரியும் கணம்  எம்.யுவன் - (ஜ்யோவ்ராம் சுந்தர்)

கவிதைகள் குறித்த புரிதல்களை ஏற்படுத்தும் நோக்கில்

விவாதங்களை முன்வைக்கிற முக்கியமான பதிவு.  கவிதை எழுதும், வாசிக்கும்  பதிவர்கள் நிரம்பியிருக்கும் வலைப்பக்கங்களில், இந்தப் பதிவு கவனமும், கருத்துக்களும் பெற வேண்டும் என நினக்கிறேன்,

,,

 

உங்கள் கருத்துக்களுக்கும், விவாதங்களுக்கும் காத்திருக்கிறோம்.

Post a Comment

13 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Please Select Embedded Mode To show the Comment System.*

To Top