‘வாடாத பக்கங்கள் ஒரு திரட்டியாக செயல்படுகிறதோ என்னும் சந்தேகம் வந்திருக்கலாம், அதனால்தான் இங்கு கருத்துப் பரிமாற்றங்கள் அதிகமாக நிகழாமல் இருக்கலாம்’ என்பதாக குப்பன் யாஹூ அவர்கள் ஒரு கருத்து தெரிவித்திருந்தார். இந்த வலைப்பக்கம் ஒரு திரட்டி போல இருந்துவிடக்கூடாது என்பதுதான் நமது விருப்பமும்.
திரட்டிகள், எழுதப்படுகிற அனைத்துப் பதிவுகளையும் உடனுக்குடன் திரட்டுகின்றன. வாடாத பக்கங்கள் அதுவல்ல. அதற்குமல்ல. தாங்கள் படித்த, ரசித்த பதிவுகளை இங்கே நண்பர்கள் அறிமுகப்படுத்த்லாம். ஏன் பிடித்திருக்கிறது எனச் சொல்லலாம். அது குறித்து கருத்துப் பரிமாற்றங்களை பின்னூட்டங்களில் தெரியப்படுத்தலாம். ஒரு உரையாடல்களுக்கான் வெளியை உருவாக்கலாம். இதுதான் நமது நோக்கம். சரியாக இது நடைமுறைப்படுத்தப்பட்டால் திரட்டிக்கும், வாடாத பக்கங்களுக்குமான வித்தியாசங்களும் தெளிவாகும் என நம்புகிறேன்.
அப்படியொரு விவாதத்தை இங்கே விநாயக முருகன் துவங்கி இருக்கிறார். முதலில் அதைப் பார்ப்போம்.
விநாயக முருகன்:
வா.மு.கோமுவின் புதிய நாவல் பற்றி மாதவராஜின் ஒரு விமர்சனம் படித்தேன். புஷ்பா தங்கதுரையை விட மோசம் என்று சொன்னது கொஞ்சம் ஓவர். இன்னும் கொஞ்சம் இந்த நாவல் பற்றி ஆழ்ந்து விமர்சனக் கருத்துகளை முன் வைத்திருக்கலாம், நாவல் மோசமாகவே இருந்தாலும் கூட. உதாரணமாக, சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் நாவலின் முதல்பகுதி 1997-ல் நடக்கிறதா அல்லது 1988-ல் நடக்கிறதா என்று எனக்கு குழப்பம். நாவல் ஆசிரியரே அவசரத்தில் குழம்பியிருக்கிறார். காதலுக்கு மரியாதை படம் பற்றி தகவல் வருகிறது (1997) பிறகு பள்ளி மாணவர்கள் தாங்கள் பார்த்த விக்ரம் படம் (1988) பற்றியும் வசனம் எழுதிய சுஜாதா பற்றியும் பாலகுமாரன் நாவல்கள் பற்றியும் பேசுகிறார்கள். உண்மையில் 1997-ல் பள்ளி மாணவர்கள் எல்லாரும் கேபிள் டி.வி இலக்கியம் பக்கம் வந்து விட்டார்கள். பாலகுமாரன் ஆன்மீக நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார்.
இது போன்ற கவனக்குறைகளை சுட்டிக்காட்டியிருக்கலாம்
நண்பர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த வலைப்பதிவுகளை தந்திருக்கின்றனர் அவைகளை பார்ப்போம்.
பா.ராஜாராம்:
இன்று வாசித்த சரவணன் - சாரதியின் புணரும் காலம் என்னும் இந்த கவிதை பிடிச்சிருந்தது. சில கவிதைகளை சிறு குறிப்பு கூட கொடுக்காமல் அனுபவிக்க விட்டுக்கொடுக்க வேணும்.அப்படி,குறிப்பின்றி விடுகிறேன்.
ஜெயமார்த்தாண்டன்:
சென்ற வாரத்தில் என்னை கவர்ந்த பதிவுகள் இவை. சொல்வனம் இணைய இதழில் ஆர்.எஸ்.நாராயனண் எழுதிய “தாவரங்களுடன் பேசிய அற்புத விஞ்ஞானி – கார்வர் . ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற இயற்கைவளத்தையும் ,மண்னையும் நேசித்த ஒரு அமெரிக்க வேளாணமை விஞ்ஞானியின் வாழ்வையும் அவர் வாழ்வின் சாரத்தையும் முன்வைக்கிறது.
ஹிரோஷிமா,நாகசாகியின் அழிவிலிருந்து தப்பியவர்களிடம் நேரடியாக பேட்டிக்கண்டு தொகுத்திருக்கும் ராபர்ட் ஜங்க் என்பவரின் Children of Ashes என்ற புத்தகத்தை அறிமுகம் செய்கிறது தமிழச்சியின் இந்த பதிவு
சமீபத்தில் நான் படித்த நல்ல அங்கத சிறுகதை சுரேகாவின் “எனக்கு ஏன் இந்த தண்டனை? ”அவரின் நடையும்,சமகால அரசியலுடன் நாம் இந்த சிறுகதையை பொருத்திப்பார்க்க முடிவதும் இந்த கதையை முக்கியமாக்கிவிடுகிறது.
மாயுரம் வேதநாயகம் பிள்ளையைப்பற்றிய அரிய தகவல்களை தருகிறது
முனைவர் நா.இளங்கோவின் இந்த பதிவு.
ஜோதி:
இன்று படித்த அகிலனின் "My name is Agiilan and I am not a terrorist" மை நேம் இஸ் கான் திரைப்படத்துடன் ஒத்துப்போதும் தஙகளது வாழ்க்கையின் சங்கடங்களை தெரிவிக்கிறார். உண்மையான இந்த விடயங்களை படிக்கும் பொழுது மனது கனக்கச்செய்கிறது
லாவண்யா:
உமாகதிர் அவர்களில் பிரிவுதுயர் கவிதை அருமையாக இருந்தது.
//வெட்டப்படாத நகங்களைப்போல உனது
நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன// அழகான படிமம் இது.
மண்குதிரையின் ரொம்ப சந்தோசமாக இருக்கிறது கவிதை பிடித்திருந்தது
//ஒழுகும் வெயிலைப் பருகுகிறேன்// இது வித்தியாசமான வரிகளாக பட்டது.
துரான் குணாவின் ஆத்மாநாம் இருந்த மருத்துவமனை கவிதை பிடித்திருந்தது
//நான் எரிந்துகொண்டிருக்கிறேன்
சூரியன் அணைந்துகொண்டிருக்கிறது// கவர்ந்த வரிகள்
மா.கார்த்திகைப் பாண்டியன்:
தமிழின் இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்து, அவர்களின் படைப்புகளை வெளியிடுவதற்காகவே இயங்கி வருகிறது "அழியாச் சுடர்கள்" என்ற வலைத்தளம். உபபாண்டவம் குறித்த எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பேட்டி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. புத்தகத்தின் மீதான எதிர்வினைகளும், அதற்கு எஸ்ரா கொடுக்கும் விளக்கங்களும் மிக முக்கியமானவை. மகாபாரதத்தோடு தொடர்புடைய புத்தகங்கள் பற்றிய தகவல்களும், மகாபாரதம் எப்படி ஒவ்வொருவரின் கண்ணோட்டங்களிலும் வித்தியாசப்படுகிறது என்பதை படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. கன்னித்தன்மை குறித்த எஸ்ராவின் கருத்தும் கவனத்தை ஈர்க்கிறது.
"சாங் ஆப் ஸ்பாரோஸ் " என்கிற மஜீத் மஜிதியின் இரானிய படம் பற்றிய முரளிகுமார் பத்மநாபனின் பதிவும் அருமை.
ராம்ஜி யாஹூ:
இன்று நான் ஜ்யோவ்ராம் சுந்தரின் பெயர்களைப் பற்றிய பதிவு படித்தேன். அவரது வலைப்பக்கத்தில் கண்ட இந்த ஆங்கில இடுகை மிகவும் சுவையாக இருந்தது.
எனது கவனம் அறிவன் மற்றும் முத்துகுமாருக்கு நடந்த உரையாடல், கருத்து வேறுபாடு அல்ல:
சிறு குழந்தைகள் முன் பெரியவர்கள் முத்தமிடலாமா
கதிர்:
ஈழத்துத் தமிழை மிகச்சிறந்த அவதானிப்போடும், காதல் மேல் இருக்கும் உண்மையான காதலை வெளிப்படுத்திய நண்பர் பழமைபேசியின் யாழினி இடுகை. படித்தவுடன் யாழினி கதாபாத்திரம் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது. வாழ்க அந்தப் பெண் என்று மனது நெகிழ்ந்தது.
காதலுக்கு காதலைவிட வேறு எதை பரிசாக கொடுக்க முடியும்.புனைவு போல் தோன்றினாலும், அந்த நிகழ்வு உண்மை என்று உணர்ந்த போது, நெகிழ்ந்து போனது உண்மை.
பாபு:
நேற்று படித்த ஒரு கவிதை - நாட்டின் பேராண்மையும் ஈனவெங்காயமும்..!!! இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவியின் அறச்சீற்றம்... பாடம் சம்பந்தமட்டுமல்லாமல் எழுதுவதற்கும், ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவி, ஜெ.நிவேதாக்கு வாழ்த்துக்கள்!
காதியைப் பற்றி எழுத்தாளர் பா.ராகவன் (பாரா) மதனசுந்தர ஜவ்வாது பாகவதர் மிகவும் சுவாரிசியமானது. எல்லாமே வியாபாரமான இந்த உலகில் அரசாங்கம் காதிக்கும் 'கொஞ்சமே கொஞ்சம்' விளம்பரம் செய்தால் நல்லா இருக்கும்!
L.X.ஜெரோம் சமீபத்தில் எழுதின 'VALENTINE Hijacked… இடம் மாறும் மையமும் ஓரங்களும்...' அருமையான பகிர்வு!
சந்தனமுல்லை:
பூங்குழலியின் என்னவென்று சொல்வது ? இடுகையை வாசித்தேன்.! எனக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை.ஆனால், அனைவரும் வாசிக்க வேண்டிய இடுகை என்று மட்டும் தோன்றுகிறது!
நண்பர்கள் இந்தப் பதிவுகள் குறித்த விமர்சனங்களை, கருத்துக்களை இங்கே பின்னூட்டமாகத் தெரிவிக்கலாம். பிடித்தமான பதிவுகளை இந்த மெயில்களுக்கு அனுப்பித் தெரிவிக்கலாம்.