வாடாத பக்கங்களின் முதல் பக்கம், உங்களால் உற்சாகமாக எழுதப்பட்டு இருக்கிறது. பல நண்பர்கள், தாங்களும் இந்த வாடாத பக்கங்களுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சியாக பரிணமிக்க வேண்டும்.
இதன் நோக்கம் அறிந்து, பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரேநாளில் 29 followerகள் இணைந்திருப்பது அதைத்தான் காட்டுகிறது. கூடவே எதிர்பார்ப்புகளையும் உணர்த்துகிறது.
வடகரைவேலன் அவர்கள், இந்தப் பக்கங்களுக்கான 10 விதிமுறைகளை உருவாகித் தந்திருக்கிறார். குறைகளையும், பலவீனங்களையும் தவிர்ப்பதற்கும், சரியான திசையில் பயணிப்பதற்கும் அவை நிச்சயம் கைகாட்டும். அவை இந்த வலைப்பக்கத்தில் ‘உங்கள் பக்கங்கள்’ என ஒரு விட்ஜெட்டாக நிரந்தரமாக இருக்கட்டும்.
நேற்று நம் நண்பர்கள் சிலர், அவர்கள் வாசித்த பதிவுகளில் தங்களைக் கவர்ந்தவைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.
லேகா:
இன்று நான் ரசித்து வாசித்த பதிவு ,சுரேஷ் கண்ணனின் "லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்"
நல்லதோர் அறிமுகம்.சோகத்தின் கோர முகத்தை காவியமாய் திரையில் கொண்டு வந்த படைப்புகளில் மிக சிறந்தது இப்படம் என்கின்றார். இப்படத்தின் நாயகியாய் நடித்த நடிகை குயிலிட்டா மசினா குறித்த எஸ்.ராவின் கட்டுரை ஒன்று, படம் பார்க்கும் ஆவலை தூண்டுவதற்கு மேலும் ஒரு காரணம்.
பா.ராஜாராம்:
இன்று வாசிக்க வாய்த்த நர்சிம்மின் "என்னுள் விலகும் நான்" எனும் கட்டுரை மிக பிடித்திருந்தது.அந்த மொழி வசீகரம்,சிந்தனை,பேசும் தொணி அழகாய் வந்திருக்கு.
ஜோதி:
திரு சுரேகா அவர்களின் இந்த பதிவு "எனக்கு ஏன் இந்த தண்டனை"
இராமாயணத்தில் சுக்ரீவ நாட்டு ப்ரஜைகள் பேசுவது இன்றைய உலக நடப்பை பேசுகிறது.
கும்க்கி:
மிகப்பிடித்த வலைப்பக்கம் ஒன்றுண்டு. பேச்சியம்மை - நாஞ்சில் நாடன்.
Deepa:
சந்தேகமே இல்லை. இன்று படித்ததிலேயே மிகப் பிடித்தது ரிஷபனின் சிறுகதை தான். அதிலும் அவர் நெகட்டிவான கேரக்டரை first person -ல் சொல்லி இருப்பது பாராட்டத் தக்கது.
kapiish:
படித்ததில் பிடித்த பதிவு/இடுகை: இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’
இந்த இடுகையில் இருப்பது நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும், இதை வாசிக்கும்போது, மன அழுத்தம்,கோபத்தைக் குறைச்சுக்கத் தோணும்.(அப்படின்னு நினைக்கறேன்)நிறைய பேர் ப்ரஷர் குக்கர் மாதிரி அழுத்ததோடவே இருக்காங்க. அவங்களுக்கு உபயோகப்படலாம் //மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்//
மாதவராஜ்:
நிலாரசிகனின் ‘நதி’ என்னும் கவிதை அற்புதமாய் வந்திருக்கிறது. அகநாழிகையின் ’பிள்ளை விளையாட்டும்’ அருமை. இரண்டுமே எளிய வார்த்தைகளில் மிகப் பெரும் விஷயங்களைச் சொல்கின்றன.
பா.ராஜாராமின் விளக்கில் விசும்பும் பூதம் கவிதை வழக்கம் போல அற்புதமாய் வந்திருக்கிறது. அதில் அம்பிகாவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.
‘வண்ணநிலவனின் ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ குறித்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்திருக்கும் ஜெயமார்த்தாண்டனின் பதிவு நன்றாக இருக்கிறது. நாவலில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் வாசகனை எழுத்தில் பார்க்க முடிகிறது.
ஆடுமாடு என்கிற பேரில் ஏக்நாத் அவர்கள் எழுதிய காடு பற்றிய பதிவுத் தொடர் - 9 படித்தேன். மொழியின் வளமையும், நாம் அறியாத வாழ்க்கையும் பூத்துக்கிடக்கும் வெளி இது. அள்ள அள்ளக் குறையாமல், காடு அலை அலையாய் நெஞ்சில் முட்டுகிறது. வலைப்பக்கத்தில் நான் நேசிக்கும் எழுத்துக்கள் இவருடையதும் ஆகும்.
இந்தப் பதிவுகள் குறித்த தங்கள் கருத்துக்களை இங்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்குப் பிடித்த பதிவுகளை சிறுகுறிப்போடு கீழ்க்கண்ட மெயில்களுக்குத் தெரிவியுங்கள்.
jothi.mraj@gmail.com
vadakaraivelan@gmail.com