Headlines News :

வாடாத பக்கங்கள் - 8

Written By மாதவராஜ் on Friday, March 26, 2010 | 1:47 AMவணக்கம்.

வாடாத பக்கங்களின் முயற்சியையும், நோக்கத்தையும் பாராட்டி, மேலும் செழுமைப்படுத்தும் விதமாய் நண்பர் ந. கணேசன் அவர்கள் வலைமலர் என்னும் ஒரு குழுமம் துவங்கி இருக்கிறார்.

வாடாத பக்கங்களில் பகிரப்படும் பதிவுகள் குறித்து உரையாடல் நடத்த இந்தக் குழுமம் பயன்படும் என தெரிவித்திருக்கிறார். அவருக்கு நன்றிகள். விருப்பமுள்ளவர்கள் இங்கே இணையலாமே.
Google Groups

Subscribe to வலைமலர்

Email:

Visit this group

மிக்க நன்றி.


பரிந்துரைக்கப்பட்ட பதிவுகள்:..


பரிந்துரைத்தவர்: நேசமித்ரன் 

1) முத்தமிடும் வியாபாரிகள் ( ursula)

கவிஞர் யவனிகா ஸ்ரீராமின் புதல்வர் ராகவன் தனக்கான புது மொழியுடன் எழுதிவரும் கவிதைகளில் கரிசல் வாசனையும் கரிம வாசனையும் சமவிகிதத்தில் கல்குதிரையில் வெளியான கவிதைகள் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.

2.நான் சந்தித்த கதைசொல்லிகள் (தீபா)

பால்யத்தின் தாழ்வாரத்தில் குழந்தைகளுக்கான குழந்தையின் குழந்தையாக இவரின் பதிவுகளும் பகிர்வுகளும் கடல் மீளும் அலை இழுக்கும் காலடி மணலின் பரவச வெளிக்கு அழைப்பவை .கணினி விளையாட்டுகளில் கார்ட்டூன் சித்திரங்களில் உலவும் கதைசொல்லிகளற்ற இன்றைய குழந்தையை முன்னிறுதி தம் பால்யத்தை வாசிப்பை பதிவு செய்திருக்கும் இடுகை இது.

3.பெரியாரும் லீனா மணிமேகலையும் (சுகுணா திவாகர்)

லீனா மணிமேகலையின் கவிதை மொழி குறித்த சகல சர்ச்சைகள் கலாசார ,ஒழுக்கத்திரைகள் eccentric  பிம்பம் எல்லாம் கடந்து தந்தை பெரியாரின் பெண்ணியம், காமம் , நடத்தை, தார்மீக விதிகள், மீறல் முதலியன குறித்துப் பேசும் குடியரசு இதழின் பத்திகளை பதிவு செய்திருக்கிறார் கலகக்கார பிம்பம் உள்ள சுகுணாதிவாகர்.

பரிந்துரைத்தவர் : மாதவராஜ்

1. சில்ரன் ஆப் ஹெவன் இயக்குனர் மஜீத் மஜீதி (வண்ணத்துப்பூச்சியார்)

ஈரானிய இயக்குனரும், உலகம் முழுவதும் மனிதர்களை அற்புத குழந்தைளால் கொள்ளை கொண்டவருமான மஜித் மஜிதியைப் பற்றிய குறிப்புகளும், விவரங்களும். முக்கியமான தொகுப்பு.

2.முப்பது வரிகள் (நதியலை)

பார்சிலோனியாவில் பிறந்த ஸ்பெயின் நாட்டு கட்டலோனியா மொழி எழுத்தாளர் மான்சோவின் எழுத்துக்களிலிருந்து சுவாராசியமான ஓன்றை இங்கே மொழியாக்கம் செய்து தந்திருக்கிறார். நகைச்சுவை பொதிந்திருந்தாலும், எழுதுபவனின் கைகளுக்கும், இதயத்துக்கும், மூளைக்கும் நடக்கும் உரையாடல்களைப் போல நுட்பமான விஷயங்களைச் சொல்கிறது. எழுத்தின் பயணம். மிகவும் ரசித்த பதிவு இது.

3.உறவு (கென்)

கதை முடியாமல் வாசகனுக்குள் இறங்கி அலைக்கழிக்கிறது. தவிப்பு அடங்க மாட்டேன்கிறது. சூடு தணிக்க முடியாமல் பெரும் இரைச்சலோடு பெய்கிறது மழை. எறியும் சாப்பாட்டுத்தட்டு விதியை சபிக்கிறது. வாழ்விலிருந்து பிறந்த எழுத்துக்களுக்கு எத்தனை வலிமை!

4.வேப்ப மரமும் ஆத்தாவும் (ஆடுமாடு)

மொழியும் மனிதர்களும் வேறு வேறாக இல்லாமல் இருப்பது இவரது சிறப்பு என நினைக்கிறேன். சாமியார்கள் இல்லை இந்த ஆத்தாக்கள். புதிர்களை கொண்டையில் முடிந்து நம் கண்முன்னே நடமாடிக்கொண்டு இருக்கும் எளிய மனிதர்கள். நம் மரபின் வழியாக கிராமத்து ஆன்மாவும், நம்பிக்கையும் சொல்லப்படுகிறது.
Share this article :

8 உரையாடல்கள்:

சசிகுமார் said...

வாடாத பக்கங்கள் வாடாமல் இருக்க என் வாழ்த்துக்கள் நண்பா, உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பைத்தியக்காரன் said...

தகவலுக்காக -

'லீனா மணிமேகலை கவிதை மொழி' குறித்த இடுகையை, தந்தை பெரியாரின் பெண்ணியம், காமம் , நடத்தை, தார்மீக விதிகள், மீறல் முதலியன குறித்துப் பேசும் குடியரசு இதழின் பத்திகளை குறிப்பிட்டு எழுதியவர் தோழர் அதிஅசுரன். அவரது இடுகையை சுகுணா தன் வலைத்தளத்தில் எடுத்துப் போட்டிருக்கிறார். இது குறித்த அறிமுகக் குறிப்பும் சுகுணாவின் இடுகையில் உள்ளது.

தோழமையுடன்
பைத்தியக்காரன்

மாதவராஜ் said...

சசிகுமார்!
நன்றி.


பைத்தியக்காரன்!

எப்படி இருக்கீங்க.

நேசமித்ரன் இந்த பதிவை பரிந்துரைத்திருந்தார்.அந்த லிங்கைப் பார்த்தேன். இங்கு சுகுணா திவாகர் அவர்களின் வலைப்பக்கம் என்பதால் அவரைக் குறிப்பிட்டு இருந்தோம்.

தங்கள் தகவல், வாசிப்பவர்களுக்கு நிச்சயம் உதவும்.

மிக்க நன்றி.

Madurai Saravanan said...

நன்றி. வாடா பக்கங்கள் வாடாமல் இருக்க வாழ்த்துக்கள்

butterfly Surya said...

பரிந்துரைக்கு நன்றி நேசமித்ரன்.

நன்றி தோழரே..

சே.குமார் said...

இன்று உங்கள் வாடாத பக்கங்களை பார்த்தேன். இனி அடிக்கடி வருவேன்.

வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் said...

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் நல்லாயிருக்கே... பாராட்டுகள்

Anonymous said...

subject: create an archive page in your blog as like writer marudhan. see his archive page here


http://marudhang.blogspot.com/p/archives.html

To create an archive page as like writer marudhan follow steps mentioned here


http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html


(NOTE: if you create an archive page by following the instructions in the above site the archive page will not show all post titles immediately. you should wait upto 1 week...)

your widget

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வாடாத பக்கங்கள் - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template