Headlines News :

வாடாத பக்கங்கள் - 2

Written By மாதவராஜ் on Thursday, February 18, 2010 | 9:36 PM

வாடாத பக்கங்களின் முதல் பக்கம்,  உங்களால் உற்சாகமாக எழுதப்பட்டு இருக்கிறது. பல நண்பர்கள், தாங்களும் இந்த வாடாத பக்கங்களுக்கு பங்களிப்பு செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள். இது ஒரு கூட்டு முயற்சியாக பரிணமிக்க வேண்டும்.

 

இதன் நோக்கம் அறிந்து,  பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். ஒரேநாளில் 29  followerகள் இணைந்திருப்பது அதைத்தான் காட்டுகிறது. கூடவே எதிர்பார்ப்புகளையும் உணர்த்துகிறது.

 

வடகரைவேலன் அவர்கள், இந்தப் பக்கங்களுக்கான 10 விதிமுறைகளை உருவாகித் தந்திருக்கிறார். குறைகளையும், பலவீனங்களையும் தவிர்ப்பதற்கும்,  சரியான திசையில் பயணிப்பதற்கும் அவை நிச்சயம் கைகாட்டும். அவை இந்த வலைப்பக்கத்தில் ‘உங்கள் பக்கங்கள்’ என ஒரு விட்ஜெட்டாக நிரந்தரமாக இருக்கட்டும்.

 

 

நேற்று நம் நண்பர்கள் சிலர், அவர்கள் வாசித்த பதிவுகளில் தங்களைக் கவர்ந்தவைகளைச் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள்.

 

லேகா:

 

இன்று நான் ரசித்து வாசித்த பதிவு ,சுரேஷ் கண்ணனின் "லா ஸ்ராடா - துயரத்தின் காவியம்"


நல்லதோர் அறிமுகம்.சோகத்தின் கோர முகத்தை காவியமாய் திரையில் கொண்டு வந்த படைப்புகளில் மிக சிறந்தது இப்படம் என்கின்றார். இப்படத்தின்  நாயகியாய் நடித்த நடிகை குயிலிட்டா மசினா குறித்த எஸ்.ராவின் கட்டுரை ஒன்று, படம் பார்க்கும் ஆவலை தூண்டுவதற்கு மேலும் ஒரு காரணம்.

 

 

பா.ராஜாராம்:

 

இன்று வாசிக்க வாய்த்த நர்சிம்மின் "என்னுள் விலகும் நான்" எனும் கட்டுரை மிக பிடித்திருந்தது.அந்த மொழி வசீகரம்,சிந்தனை,பேசும் தொணி அழகாய் வந்திருக்கு.

 

 

ஜோதி:

 

திரு சுரேகா அவர்களின் இந்த பதிவு "எனக்கு ஏன் இந்த தண்டனை" 
இராமாயணத்தில் சுக்ரீவ நாட்டு ப்ரஜைகள் பேசுவது இன்றைய உலக நடப்பை பேசுகிறது.

 

 

கும்க்கி:
மிகப்பிடித்த வலைப்பக்கம் ஒன்றுண்டு.  பேச்சியம்மை - நாஞ்சில் நாடன்.

 

 

Deepa:

 

சந்தேகமே இல்லை. இன்று படித்ததிலேயே மிகப் பிடித்தது ரிஷபனின் சிறுகதை தான். அதிலும் அவர் நெகட்டிவான கேரக்டரை first person -ல் சொல்லி இருப்பது பாராட்டத் தக்கது.

 

kapiish:

படித்ததில் பிடித்த பதிவு/இடுகை:  இளம் வயதில் வரும் `ஹார்ட் அட்டாக்’ 
இந்த இடுகையில் இருப்பது நிறைய பேருக்குத் தெரிந்திருந்தாலும், இதை வாசிக்கும்போது, மன அழுத்தம்,கோபத்தைக் குறைச்சுக்கத் தோணும்.(அப்படின்னு நினைக்கறேன்)நிறைய பேர் ப்ரஷர் குக்கர் மாதிரி அழுத்ததோடவே இருக்காங்க. அவங்களுக்கு உபயோகப்படலாம் //மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன் பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும்//

 

 

மாதவராஜ்:

 

நிலாரசிகனின் ‘நதி’ என்னும் கவிதை அற்புதமாய் வந்திருக்கிறது. அகநாழிகையின் ’பிள்ளை விளையாட்டும்’ அருமை. இரண்டுமே எளிய வார்த்தைகளில் மிகப் பெரும் விஷயங்களைச் சொல்கின்றன.

 

பா.ராஜாராமின் விளக்கில் விசும்பும் பூதம் கவிதை வழக்கம் போல அற்புதமாய் வந்திருக்கிறது. அதில் அம்பிகாவின் பின்னூட்டத்தையும் ரசித்தேன்.

 

 ‘வண்ணநிலவனின் ‘ரெய்னீஷ் ஐயர் தெரு’ குறித்த வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்திருக்கும் ஜெயமார்த்தாண்டனின் பதிவு நன்றாக இருக்கிறது. நாவலில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் வாசகனை எழுத்தில் பார்க்க முடிகிறது.

 

ஆடுமாடு என்கிற பேரில் ஏக்நாத் அவர்கள் எழுதிய காடு பற்றிய பதிவுத் தொடர் - 9 படித்தேன். மொழியின் வளமையும், நாம் அறியாத வாழ்க்கையும் பூத்துக்கிடக்கும் வெளி இது. அள்ள அள்ளக் குறையாமல், காடு அலை அலையாய் நெஞ்சில் முட்டுகிறது. வலைப்பக்கத்தில் நான் நேசிக்கும் எழுத்துக்கள் இவருடையதும் ஆகும்.

 

 

இந்தப் பதிவுகள் குறித்த தங்கள் கருத்துக்களை இங்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். உங்களுக்குப் பிடித்த பதிவுகளை சிறுகுறிப்போடு கீழ்க்கண்ட மெயில்களுக்குத் தெரிவியுங்கள்.

 

jothi.mraj@gmail.com
vadakaraivelan@gmail.com

Share this article :

13 உரையாடல்கள்:

ராகவன் said...

அன்பு மாதவராஜ்,

நான் நேற்று படித்த " தண்டோராவின் - வாழைப்பூ வாசம்" என்ற சிறுகதையும், எட்டயபுரத்தில், கலாப்ரியா எழுதிய untitled போஸ்ட், ஆச்சியை பற்றிய பதிவும் என்னை ரொம்பவும் பாதித்தது... அதை பதிவுலக நண்பர்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

அன்புடன்
ராகவன்

ஆடுமாடு said...

மாதவராஜ்,
மற்றும் வடகரை வேலனுக்கு நன்றி.

'ஏக்நாத் அவர்களே...' என்பது கொஞ்சம் ஓவர்தான்.

வாழ்த்துகள்.

கபீஷ் said...

ஒரு சின்ன திருத்தம்: என் பெயர்: Kabheesh/கபீஷ், திருத்தணும்னு இல்ல, சும்மா தகவலுக்காக :-)

குப்பன்.யாஹூ said...

இன்று நான் வாசித்தது லேகா -யாழிசை ஒரு இளகிய பயணம் இல் தங்க ராணி குறித்த பதிவு. நாடகங்கள் குறைந்து வரும் இந்த கால கட்டத்தில் நாடகம் குறித்த புத்தகத்தின் பதிவு இது.

ஜெயமோகன் எழுதி உள்ள சிற்பகலைக்கு ஒரு இழப்பு என்ற பதிவு. அதில் இன்றும் நேற்றும் உள்ள ஆட்சியாளர்கள் பாறைகளையும், மணல் வெளிகளையும், பணத்திற்காக
கொள்ளை அடிப்பது குறித்து பதிந்து உள்ளார்.

மாதவராஜ் said...

நண்பர்கள் ராகவனுக்கும், குப்பன் யாஹூ அவர்களுக்கும் ஒரு சிறு வேண்டுகோள்.

தங்களுக்குப் பிடித்தமான பதிவுகளையும், அதற்கான சுட்டிகள் மற்றும் சிறுகுறிப்பு தந்து பதிவின் கீழே தந்துள்ள மெயில் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கவும்.

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள - பதிவுகள் குறித்து உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை இங்கே பின்னூட்டமிடலாம்.

cheena (சீனா) said...

அன்பின் மாதவராஜ் மற்றும் அண்ணாச்சி

நல்லதொரு செயல் - நல்வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

இன்று இரண்டு நல்ல கவிதைகள் வாசித்தேன்.

ஒன்று ராகவனின் நதியானவள்.

இரண்டு அமித்தம்மாவின் பெற்றவள்.

இரண்டும் ஒன்றுதானோ? :-)

மாதவராஜ் said...

லேகா பரிந்துரைத்த சுரேஷ் கண்ணனின் விமர்சனம் நானும் படித்தேன். அற்புதம். அந்த விமர்சனத்தை வாசிக்கிறவனை ஆட்கொள்ளுகிறது அவர் சொல்ல வருவது. இது முக்கியம். ஒரு நாவலை படித்து முடித்துவிட்டு காலங்களுக்குள் வெறிச்சிட்டுப் போக முடிகிறது. அந்தப் பெண்ணை தோளில் சாய்த்து, கூந்தலை வருட வேண்டும் எனத் தோன்றுகிறது.

நர்சிம்மின் பதிவை நானும் படித்தேன். அவரது பல பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். செம்பட்டைக்கிழவியும், அய்யனார் கம்மாவும் எனக்கும் பிடிக்கும். அவருடைய பதிவுகளை வாசித்திருப்பதால், ராஜாராம் சொல்லியிருக்கும் இந்தப் பதிவில் எனக்குப் பட்டதை இங்கு சொல்லலாம் என நினைக்கிறேன். அவருடைய சில பதிவுகளில், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் சாயல் தெரியும். சில நேரங்களில் சுஜாதாவாக முயற்சிப்பார். சில நேரங்களில் அனுஜன்யாவாக முயற்சிப்பார். இந்த தடவை இன்னும் மொழியை இறுக்கமாக்க முயற்சித்திருக்கிறார். என்னளவில் வசீகரம் தெரியவில்லை. அவருக்கான மொழியை அறிந்துகொள்ள ஒரு குளவி போல தொடர்ந்து பிரயத்தனப்படுகிறார் என்று மட்டும் தெரிகிறது. அது வசப்பட்டால், இன்னும் அவர் இயல்பாய் நிறைய சொல்லக்கூடும். எழுதுகிறவன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி மொழியும், தொனியும் இருப்பதாக பலர் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

பா.ராஜாராம் அவர்களின் கவிதை பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்த தடவையும் பல பேர் ‘புரியவில்லை’ என்கிறார்கள். கவிஞனுக்கு உள்ள ஆகப்பெரும் சங்கடங்களில் ஒன்று, தான் எழுதியதற்குத் தானே கோனார் நோட்ஸ் போடுவது. அதனால் நான் சொல்லலாம். அந்த ‘முதலாளிக்கு’ தன்னை முதலாளி, முதலாளி என யாராவது அழைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை பகடி செய்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

பா.ராஜாராம் said...

மன்னிக்கணும்..

ராகவன் கவிதை நதி வழி.

பா.ராஜாராம் said...

//அந்த ‘முதலாளிக்கு’ தன்னை முதலாளி, முதலாளி என யாராவது அழைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை பகடி செய்திருப்பதாக எனக்குத் தோன்றியது.//

:-))

மாதவராஜ் said...

பா.ரா!
தங்களுக்குப் பிடித்த பதிவுகள், அந்த இடுகைகளுக்கான சுட்டிகள், அத்தோடு உங்களது சிறுகுறிப்பு இவைகளை எங்கள் மெயிலுக்கு அனுப்பலாமே. இங்கு, இந்தப் பதிவில் குறிப்பிட்டு இருக்கும் பதிவுகளைப் பற்றிய உங்கள் கருத்துக்கள், பார்வைகளை பின்னூட்டமிட்டால் நன்று.

Tech Shankar said...

தங்கள் பதிவுக்கு நன்றிகள்..

East Or West Sachin is the Best. It was an amazing performance by Sachin. Congrats to Sachin Dear Little Master.

Have a look at here too..

Sachin Tendulkar's Rare Photos, Sachin's Kids pictures, Videos

மதுரை சரவணன் said...

நல்ல தகவல்களுக்கு நன்றி.

your widget

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வாடாத பக்கங்கள் - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template