Headlines News :

வாடாத பக்கங்கள் - 1

Written By மாதவராஜ் on Wednesday, February 17, 2010 | 9:23 PM

நண்பர்களுக்கு வணக்கம். 

 

வலைப்பக்கங்களில் எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்குமான உரையாடல், அவரவர் வலைப்பக்கங்களில் மட்டுமே நிகழந்து கொண்டு இருக்கின்றன. குறிப்பிட்ட ஒரு பதிவரின், ஒரு பதிவைப்பற்றியதாக அந்தப் பின்னூட்டங்கள் இருக்கின்றன. பலசமயங்களில் அவை ஒப்புக்கோ அல்லது மேம்போக்காகவே இருப்பதையும் காண முடிகிறது. உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் எழுதப்படும் பல முக்கியப் பதிவுகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவர்களது வலைப்பக்கங்கள் அடையாளமற்றுப் போகின்றன.

 

பதிவுகளைப் பற்றி, வலைப்பக்கங்களைப் பற்றி உரையாடும், ஓரளவுக்கு உயிரோட்டமுள்ள ஒரு பொதுவெளி வேண்டும் என யோசித்துக் கிடந்ததில் என் சிற்றறிவுக்கு எட்டியது இது. இங்கு யாரும் யாருக்கும் ஓட்டுகள் போட வேண்டியதில்லை. அவரவர்கள் படித்தது, அதில் பிடித்தது, புரிந்தது, புரியாதது என யாவற்றையும் பகிர்ந்து கொள்ளலாம். விவாதிக்கலாம். அப்படி ஒரு ஏற்பாட்டோடும், நோக்கத்தோடும்தான் இந்த வலைப்பக்கம் ஆரம்பிக்கப்படுகிறது. 

 

இந்த ‘வாடாத பக்கங்களின்’ ஒவ்வொரு நாளின் பதிவிலும்-
வலைப்பக்கங்களில் முந்தின சில நாட்களில் படித்தது, அவைகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்து அன்றைய உரையாடலை ஒருவர் ஆரம்பித்து வைக்க வேண்டும். பதிவுகளில் வந்த நல்ல, ஆரோக்கியமான பின்னூட்டங்கள் பற்றியும்கூட அவர்கள் தெரிவிக்கலாம். மற்றவர்கள், அது குறித்து தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம். அல்லது தாங்கள் வாசித்ததையும், அதில் பிடித்தமானவைகளையும் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம்.

 

இங்கு பதிவும், பின்னூட்டங்களும் சம மரியாதையும், அடையாளமும் கொண்டவை என்னும் புரிதல் வேண்டும்.

 

மொத்தத்தில்- நல்ல, முக்கியமான பதிவுகள் அடையாளம் காணப்படும். அவை வாடாத பக்கங்களாக நிலைக்கவும் செய்யும். ஒரு கருத்துக்கூடமாகவும் இருக்கும். ஒரு reference  போலவும் இந்த வலைப்பூ உருப்பெறும். 

 

இந்த முயற்சியை மேலும் செழுமைப்படுத்தும், வளர்த்தெடுக்கும் சிந்தனைகளை எதிர்பார்க்கிறேன். 

 

இந்த வலைப்பூவுக்கு இன்னொரு Author ஆக வடகரைவேலன் அவர்கள் இருக்கச் சம்மதித்து உள்ளார். அவருக்கு நன்றி. 

 

யாரும், தங்கள் விருப்பங்களைப் பதிவாக தெரிவிக்க முன்வராவிட்டால் நானே அக்காரியத்தைத் தொடர்ந்து செய்யக்கூடிய அபாயமும் உண்டு. அது ஆரோக்கியமாகவும் இருக்காது. அதைத் தவிர்ப்பது உங்கள் கையில்!

 

இந்த வலைப்பூவை வாடாமல் இருக்கச் செய்வதும் உங்கள் கையில்.

 

ஆரம்பிப்போம்! 

_____________________________________________________________

 

17.2.2010 அன்று நான் படித்தவை:

 

 • சில பாராட்டுகள் – ஆதிமூலகிருஷ்ணன்
 • Outsourced - திரைவிமர்சனம் - நிலா ரசிகன்
 • Alternative Schools 'n' Mainstream Schools – சந்தனமுல்லை
 • இவனே திரையிடும் இவன் படம் - பா.ராஜாராம்
 • கேபிள் சங்கரின் சிறுகதைத் தொகுப்பு - T.V.ராதாகிருஷணன்
 • தெலுங்கானா : புதைந்துள்ள உண்மைகள் – வினவு
 • டாக்டர் ருத்ரன் அவர்களுடன் ஒரு சந்திப்பு - பாகம் 2 – தீபா
 • வீடென்று எதனை சொல்வீர்... – ராகவன்
 • கிளிஞ்சல்கள் பறக்கின்றன... - கார்த்திகா வாசுதேவன்
 • பகிர்தல் (17.2.2020) - ஈரோடு கதிர்
 • எல்லைகள் – அனுஜன்யா
 • தைப்பூசமும்... ஆரெம்கேவியும்.. – அமைதிச்சாரல் 
 • மனிதம் – ரிஷபன்
 • குரு - என்.விநாயகப் பெருமாள்
 • சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை" – லேகா
 • அன்பெனும் அதி பயங்கர ஆயுதம் – பரிசல்காரன்
 • பரிசலின் புத்தகம்..ஒரு பறவையின் கண்ணோட்டத்தில் - T.V.ராதாகிருஷணன் 

என் கருத்துக்கள்:

 

 • நிலாரசிகனின் ‘Outsourced’ படம் பற்றிய விமர்சனத்தை விட, படத்திற்கான அறிமுகம், சுவையானது.
 • சந்தனமுல்லை அவர்களின் பதிவு இன்றைய கல்வி குறித்த மாற்றுச் சிந்தனைகளை ஆராய்கிறது.  மீறமுடியாத நிர்ப்பந்தங்களையும் சுட்டிக்காட்டுகிறது.
 • காத்திகா வாசுதேவன் அவர்கள் கிளிஞ்சல்கள் பறக்கின்றன’ என வலைப்பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள கவிதைத் தொகுப்பு குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னூட்டத்தில் அகநாழிகை, பாராட்டுக்களோடு, அத்தொகுப்பில் தான் காணும் குறையையும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
 • ரிஷபனின், ‘மனிதம்’ அதிர்வுகளை ஏற்படுத்தும் சிறுகதை.
 • அன்பை ‘அதி பயங்கர ஆயுதம்’ என பரிசல்காரன் சொல்லி இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. (தலைப்பு மட்டும்தான் பிடிக்கவில்லையென்று சொன்னேன்)
 • டாகடர் ருத்ரன் அவர்களுடனான பேட்டியில், பேட்டியின் கேள்விகள் மேலும் ஆழமான விளக்கங்களைக் கோருவதாக இல்லை. இருப்பினும் தீபா, முல்லை அவர்களின் முக்கிய முயற்சி இது.
 • வினவின் பதிவு ‘தெலுங்கானா’ குறித்த வரலாற்றுப் பின்னணியை அவர்களுக்கே உரித்த தொனியில் விளக்கி இருக்கிறது.
 • அனுஜன்யாவின் எல்லைகள், மீன் தொட்டிக்குள்ளிருக்கும் மீன் குஞ்சுகளைப் பற்றிப் பேசாமல், மனிதனைப் பற்றிப் பேசுவதாக எனக்குப் பட்டது.
 • ராகவனின் கவிதை முக்கியமானது. பலரால் இவரது கவிதைகள் கவனிப்பு பெறாமல் போகின்றன என்பது எனது ஆதங்கங்களில் ஒன்று. வீட்டுச்சுவர்களைப் பற்றிய கடைசி இரண்டு பாராக்களும் நம்மை மீளமுடியாமல் செய்கின்றன. அதன் துடிப்புகளை நீங்கள் உணர முடியும்.
 • பா.ராவின் கவிதைக்கு வந்த பின்னூட்டங்களில் வெளிப்படையாக தீபாவும், முரளிகுமார் பத்மநாபன் அவர்களும் புரியவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். தலைப்போடு சேர்த்துப் படிக்கும்போது புரியமுடியும்.  கனவிலிருந்து நனவுக்கு மீளும், மீண்டு புதிதாய்த் தொடங்கும் சொற்சித்திரமாக எனக்குத் தோன்றியது.
 • சு.வேணுகோபாலின் "கூந்தப்பனை"  படித்திருக்கவில்லை. லேகாவின் புத்தக விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது. விமர்சனங்களை இன்னும் விரிவாக எழுதலாமே என எப்போதும் ஒரு கருத்து எனக்கு உண்டு.
 • விநாயக முருகனின் ‘குரு’ படித்து முடிக்கவும் புன்னகை தோன்றும்.

தங்களுக்கு விருப்பமான பதிவுகளை பின்ன்னூட்டமாகவும் தெரியப்படுத்தலாம். அல்லது கீழ்க்கண்ட மெயில்களுக்கு தெரியப்படுத்தினால், அடுத்த நாள் பதிவில் குறிப்பிடலாம்.

jothi.mraj@gmail.com

vadakaraivelan@gmail.com

Share this article :

19 உரையாடல்கள்:

நிலாரசிகன் said...

நல்ல விஷயம். வாழ்த்துகள்.

சென்ஷி said...

வாழ்த்துக்கள்

மாதவராஜ் said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.
நமக்கு நாமே வாழ்த்துக்கள் சொல்வது போல இது.
தங்களுக்குப் பிடித்த பதிவுகள் அதுகுறித்த கருத்துக்களையும் நண்பர்கள் தங்கள் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாமே!

பா.ராஜாராம் said...

அருமையான முயற்சி மாது.வாழ்த்துக்கள்!

இன்று வாசிக்க வாய்த்த நர்சிம்மின் "என்னுள் விலகும் நான்" எனும் கட்டுரை மிக பிடித்திருந்தது.அந்த மொழி வசீகரம்,சிந்தனை,பேசும் தொணி அழகாய் வந்திருக்கு மக்கா.பகிரும் பொருட்டு..

ஜோதி said...

வாழ்த்துக்கள் அண்ணா

என்னுடய பகிர்வு

திரு சுரேகா அவர்களின் இந்த பதிவு
"எனக்கு ஏன் இந்த தண்டனை"
http://surekaa.blogspot.com/2010/02/blog-post_6856.html
இராமாயணத்தில் சுக்ரீவ நாட்டு ப்ரஜைகள் பேசுவது இன்றைய உலக நடப்பை பேசுகிறது

Anonymous said...

இங்கு பின்னூட்டமிடுபவர்கள் இன்று மாதவராஜ் சொல்லிய பதிவுகள் பற்றிப் பின்னூட்டமிடலாம்.

மற்றபடி தாங்கள் ரசித்த பதிவு குறித்து சுட்டியுடன் தங்கள் கருத்துக்களை மெயிலில் அனுப்பினால் நன்றாக இருக்கும். அதை இங்கு பதிவாக வெளியிடலாம்.

புதிதாக வாசிக்க வருபவர்களுக்கான ஒரு வசதிதான் இது. இதிலிருந்து அவர்களுக்குப் பிடித்தைதைத் தேர்வு செய்து தொடர்ந்து படிக்கலாம்.

வெளியிடப் படும் பதிவுகள் எழுதியவரின் சொந்தக் கருத்துக்களாகவும், ஏதேனும் ஆட்சேபகரமாக இருப்பின் எழுதியவரிடம் விளக்கம் கேட்டும் வெளியிடப்படும். இது தேவை இல்லாத சர்ச்சைகளைத் தவிர்க்க மட்டுமே.

நல்ல சில பதிவுகள் பலரைச் சென்றடையாமலே மறைந்து விடுகின்றன, மலரும் முன் வாடும் மொட்டுக்களைப் போல. அந்தப் பதிவுகளுக்கான ஒரு வெளி இது.

நன்றி.

பா.ராஜாராம் said...

d.r.அசோக்,ஷங்கர் கவிதைகளும் அசத்துகிறது.

மாதவராஜ் said...

//இங்கு பின்னூட்டமிடுபவர்கள் இன்று மாதவராஜ் சொல்லிய பதிவுகள் பற்றிப் பின்னூட்டமிடலாம்.

மற்றபடி தாங்கள் ரசித்த பதிவு குறித்து சுட்டியுடன் தங்கள் கருத்துக்களை மெயிலில் அனுப்பினால் நன்றாக இருக்கும். அதை இங்கு பதிவாக வெளியிடலாம்.//

வேலன் அவர்கள் சொல்வதுதான் சரியான நடைமுறையாகவும் அணுகுமுறையாகவும் தெரிகிறது.

வடிவேலன் ஆர். said...

மிகவும் நல்ல விஷயம் வாழ்த்துக்கள் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்கள் நடக்க வேண்டும். படித்தவர்கள் இங்கு பாராட்டலாம் என்பது நன்றாக இருக்கிறது இதனால் எழுதியவர்க்கு நாலு பேர் முன்னிலையில் பாராட்டாக இருக்கும். வாழ்த்துக்கள்

செல்வேந்திரன் said...

அடியேன் ஆதரவு அவசியம் உண்டு!

வால்பையன் said...

நல்ல முயற்சி!

டெம்ப்ளெட் கலர் ரொம்ப தூக்கலா இருக்கு எதாவது பண்ண முடியுமா பாருங்க தோழரே!

லேகா said...
This comment has been removed by the author.
லேகா said...

மிக நல்ல முயற்சி இது.ஆரோக்கியமான விவாதங்கள் நடக்க தனியே ஒரு வலைத்தளம் அவசியமே.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் மாதவராஜ்.

கும்க்கி said...

மிகப்பிடித்த வலைப்பக்கம் ஒன்றுண்டு.

http://azhiyasudargal.blogspot.com/2010/02/blog-post_15.html

பதிவிற்கும் வலைப்பக்கத்திற்கும் நன்றி.

Deepa said...

சந்தேகமே இல்லை. இன்று படித்ததிலேயே மிகப் பிடித்தது சற்று முன் (ரொம்பவும் லேட்டாக) படித்த ரிஷபனின் சிறுகதை தான். அதிலும் அவர் நெகட்டிவான கேரக்டரை first person -ல் சொல்லி இருப்பது பாராட்டத் தக்கது.

Sangkavi said...

சார் நல்ல முயற்சி..

அப்படியே நேரம் இருக்கும் போது என் பதிவையும் படிச்சுப்பாருங்க...

http://sangkavi.blogspot.com/

குப்பன்.யாஹூ said...

நான் வாசித்தவை:

லேகாவின் கூந்தப் பனை- சிறந்த பதிவு, தேவையான அளவு பகிர்ந்து உள்ளார்.

தாங்கள் கூறுவது போல, லேகா புத்தகம் பற்றி விமர்சனம் செய்வது இல்லை, தனது வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். (pakirndhu varukiraar)

தமிழ் மொழிக்கு லேகா, கல்பனா சேக்கிழார் போன்றோர் செய்து வரும் சாதனை பாராட்டுதலுக்கு உரியது.

ஜெயமோகன் எழுதிய உலோகம்- புனைவு என்று சொனாலும் ஒரு நிஜ நிகழ்வை பதிவு செய்வது போல சிறப்பாக உள்ளது.இருந்தாலும் உள் மனதில் ஒரு வருத்தம் இருக்கிறது.

ஒரு இனத்தின் வீழ்ச்சியை நாம் நம் இலக்கிய பசிக்கு பயன் படுத்தி கொள்கிறோமோ என்று.


ருத்ரனின்- நான் பற்றிய பதிவு, நம் குண நலன்களை, விருப்பங்களை வைத்து நம்மை ஒரு வரையறைக்குள் வைத்து விடுகின்றனர் , அது தவறு என்னும் அவரோடு கருத்தோடு நானும் உடன் படுகிறேன்.

மாதவராஜின்,. காமராஜின் கம்ம்யுனிச ஊர்வலங்கள், தனியார் மயம் குறித்தும் வாசித்தேன், அருமை.

சாரு வின் ஹிந்தி பட பாடல்கள் குறித்து பதிவு பார்த்தேன், பாடல்கள் கேட்க வில்லை.
திராவிடம் பற்றி வாய் கிழிய பேசும், பக்கங்கள் கிழிய எழுதும் சாரு, ஹிந்தி பாடல்களுக்கு ஆதரவு கொடுக்கலாமா?.
சில மாதங்களுக்கு முன்பு கூட டி ஆர் பாலு அமைச்சராக இருந்த பொழுது, நெடுஞ்சாளி துறையில் ஹிந்தி பலகைகளை அளித்து தமிழில் எழுதச் சொன்னதை ஞாபகம்.
இன்றைய உலகமயமாக்கல், கூட்டாட்சி, இணைய காலத்தில் தி மு கவின், திராவிடர்களின், தமிழர்களின் ஹிந்தி எதிர்பாடு நிலை என்ன, இது குறித்து சாரு ஒரு நீண்ட பதிவு எழுதலாம் என்பது எனது வேண்டுகோள்.

Madurai Saravanan said...

nalla sinthanai. neenkal aarambiththu vaiyungkal anaivarum pin thodarvom. nalla karuththukkal pakirappatum. payanulla thakaval anaivarukkum thetaamal kitaikka vaaippu ullathu.

அருவி said...

நல்ல ஆரம்பம்.

your widget

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. வாடாத பக்கங்கள் - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template